திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (10:15 IST)

ரஜினியின் 2.0 நவம்பரிலும் ரிலீஸ் இல்லை?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தை, அடுத்த வருடம் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
 
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஹிந்தி நடிகர் அக்‌ஷய்  குமார் வில்லனாகவும், ஏமி ஜாக்சன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஏற்கெனவே ரிலீஸான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி  இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
கடந்த வருட இறுதியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் இன்னும் ரிலீஸாகவில்லை. அதற்கு பின்னர் காலா ரிலீஸாகி, ரஜினி தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் பாதியை முடித்துவிட்டார்.
 
இந்நிலையில் 2.0 படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் ஒர்க்கை கவனித்து வந்த நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் முக்கிய பகுதிகள் அந்த நிறுவனங்களில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
 
இவற்றை வெளியே கொண்டுவர பெரிய தொகையை செலவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகும் என தகவல் வெளியாகியுள்ளது.