1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (09:16 IST)

மேட்டூர் அணையிலிருந்து 2.05 லட்சம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 12 மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் திடீரென பெய்த கனமழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை அடைந்தது. அதேபோல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்குக் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து 1.85 லட்சம் கனஅடியாக இருப்பதாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு 2.05 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறி வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் கரையோரமாக உள்ள 12 மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.