1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (22:45 IST)

'ரஜினி 171 'பட புரோமோ ஷூட்டிங்!

rajini 171
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர், இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படம் ரஜினி 171.
 
சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிட்டது.  இப்படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேடுகள் வெளியாகும் என கூறப்படும் நிலையில்,  ரஜினியின் 171 பட புரோமோ ஷூட்டிங்கை இன்று லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துள்ளார்.
 
இப்பட ஷூட்டிங் சன் ஸ்டுடியோஸில்தான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்,  ரஜினி 171 படத்தின் புரோமோ வீடியோ எப்போது வெளியாகும்  என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
 
இதுவரை பார்க்காத ரஜினியை இப்படத்தின் பார்க்கப்போவதாக லோகேஷ் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.