ரஜினி படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்… இணைந்த புது நடிகர்!
ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினியோடு அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய வேடத்தில் நானி நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் இந்த படத்தில் இருந்து விலக, அவருக்கு பதில் ஷர்வானந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
1991 ஆம் ஆண்டு வெளியான ஹம் படத்தில் அமிதாப் பச்சனோடு ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தார். அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து இப்போது இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.