1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (08:58 IST)

ரஜினி 172 படத்தை ஷங்கர் இயக்குகிறாரா? தீயாய் பரவும் தகவல்!

ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை நாளை மறுநாள் சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினியின் 170 ஆவது படமாக உருவாகும் நிலையில் அடுத்து ரஜினியின் 171 ஆவது படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தோடு ரஜினி சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சமூகவலைதளத்தில் ரஜினியின் 172 ஆவது படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் சினிமா வட்டாரத்தில் இந்த தகவலில் உண்மையில்லை என சொல்லப்படுகிறது.