திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (09:17 IST)

ரி ரிலீஸ் ஆகும் ராஜாவின் பார்வையிலே… சம்பளமே வாங்காம நடித்தாரா அஜித்?

பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் படங்களும் பொங்கலுக்கு ஒரே நேரத்தில் வெளியாகின்றன. இதனால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளை இரு படக்குழுவினரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தை இந்த வாரம் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சௌந்திர பாண்டியன் படம் குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த படத்துக்கு விஜய் 3 லட்சம் சம்பளம் வாங்கினார். அஜித் சம்பளம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் மருத்துவ செலவுகளை நாங்கள் பார்த்துக்கொண்டோம்” எனப் பகிர்ந்துள்ளாராம்.