திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (14:09 IST)

வியாழக் கிழமை செண்ட்டிமெண்ட்டை விட்ட துணிவு படக்குழு!

வழக்கமாக அஜித் படங்கள் வியாழக் கிழமைகளில் அதிகளவில் ரிலீஸ் ஆகி வந்தன.

அஜித் சமீபகாலமாக சாய்பாபா பக்தி காரணமாக தனது படங்களில் அப்டேட், மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் ஆகியவற்றை வியாழக் கிழமை நாட்களில் வரும் படி பார்த்துக்கொண்டார். இதனால் பல நடிகர்களும் தங்கள் படங்களை வியாழக் கிழமை ரிலீஸ் செய்தனர்.

இந்நிலையில் துணிவு திரைப்படமும் வியாழக் கிழமை ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி புதன் கிழமை ரிலீஸ் ஆகும் என அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதற்கு முன்னர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்தின் மங்காத்தா படமும் புதன் கிழமைதான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.