1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (08:03 IST)

படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி ஷாருக் கான் திடீர் சந்திப்பு

நடிகர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் நடந்து வருகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் சிறு இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கலைஞர்களான நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி ஆகியோரும் அதில் நடிக்கின்றனர். பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. ஜவான் படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோவில்தான் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் நடக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினிகாந்த் – ஷாருக் கான் சந்திப்பு நடந்துள்ளதாக படப்பிடிப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.