இப்ப எல்லாம் ஹீரோக்கள் அதை செய்வதில்லை… ராஜமௌலி பகிர்ந்த கருத்து
இந்திய சினிமாவில் இப்போது கதாநாயக நடிகர்கள் தங்கள் வயதை மறைத்துகொள்ள விரும்புவதில்லை என ராஜமௌலி கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய சினிமாக்களில் கதாநாயகர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வரிசையில் அஜித், அமீர்கான், கமல்ஹாசன் மற்றும் தனுஷ் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
இதுபற்றி தற்போது பேசியுள்ள இயக்குனர் ராஜமௌலி “இப்போது ஹீரோக்கள் தங்கள் வயதை மறைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அஜித் எப்ப்போதோ வெள்ளை முடியோடு நடிக்க தொடங்கிவிட்டார். இது இந்திய சினிமாவுக்கு நடந்த ஒரு நன்மை என்றே கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.