திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (18:16 IST)

உத்தம் வில்லன் கடன் விவகாரம்: குறுக்கிட்ட ராஜ் கமல் பிலிம்ஸ்!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு எந்த பணமும் வழங்கவில்லை என ராஜ் கமல் பிலிம்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 
 
கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்து எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் ’உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூபாய் 10 கோடி கடன் பெற்றதாகவும், அந்த பணத்திற்கு பதிலாக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் தற்போது 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை படம் நடிக்க முன்வரவில்லை என்றும் பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் அளித்திருந்தார். 
கமல்ஹாசன் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதில்,  உத்தம வில்லன் பட விவகாரத்தில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் எந்த உத்தரவாதம் அளிக்கவில்லை என கூறியுள்ளது.
 
இந்த விவகாரத்தில் தற்போது குறுக்கிட்டுள்ள கமல் மற்றும் அவரது சகோதர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு எந்த பணமும் வழங்கவில்லை. கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானவேல் ராஜா இந்த புகாரை அளித்துள்ளார் என விளக்கம் அளித்துள்ளது.