திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (08:40 IST)

கமல் வாங்கிய கடன்: சங்கத்தில் புகார் கூறிய பிரபல தயாரிப்பாளர்!

கமல் தன்னிடம் ரூபாய் 10 கோடி கடன் வாங்கிவிட்டு 4 ஆண்டுகளாகியும் திருப்பித் தரவில்லை என பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 
கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் ஏற்பட்டதால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
 
இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூபாய் 10 கோடி ரூபாய் பெற்றதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார் 
 
 
இந்த நிலையில் ரூபாய் 10 கோடி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நமது நிறுவனத்திற்காக கமல்ஹாசன் படம் நடிக்க முன்வரவில்லை என்றும் ரூபாய் 10 கோடி பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் எழுந்திராத நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது