செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (15:17 IST)

சர்ச்சை காட்சியில் நடித்தது குறித்து விளக்கமளித்த ரகுல் பிரீத் சிங்!

தெலுங்கு தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், மன்மதடு-2 தெலுங்கு படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


 
சமீபத்தில் மன்மதடு-2 தெலுங்கு படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ரகுல் பிரீத் சிங் புகைப்பிடிப்பது போன்ற ஒரு சர்ச்சை காட்சி இடப்பெற்றிருந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தது. 


 
இந்நிலையில் தற்போது சர்ச்சை காட்சியில் நடித்ததை குறித்து விளக்கமளித்துள்ள ரகுல் பிரீத் சிங், ஒரு படத்தின் கதாபாத்திரங்களை  இயக்குனர்கள் உருவாக்கி இதில் நடிகர்களை நடிக்க வைக்கின்றனர். படங்களில் வருவது போன்று நாங்கள் நிஜ வாழ்க்கையில் இருப்பதில்லை. நான் நிஜ வாழ்க்கையில் புகைபிடிப்பதுமில்லை. 
 
மேலும் நான் என்னுடைய ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையற்ற பழக்கங்களை தவிர்த்து நிறைய உடல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். இது என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்றாக தெரியும். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களில் கதாநாயகன் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுள்ளது. உடனே அவர்கள் அதனை ரசிகர்கள் புகைப்பிடிக்க ஊக்குவிக்கிறார்கள் என்று அர்த்தமா? சினிமாவில் செய்வதை நிஜ வாழ்க்கையில் நாங்கள் கடைபிடிப்பது இல்லை.


 
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். என்னை என் பெற்றோர்கள் புரிந்துள்ளனர். அதுபோதும் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.