கஜோல் கணவருடன் படுமோசமாக ஆட்டம் போட்ட ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் வீடியோ!

Last Updated: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (14:59 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார்.
 
கடைசியாக இவர் நடித்த ‘தேவ்’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படம் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக  நடித்துள்ள, ‘என்.ஜி.கே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 


 
ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்துள்ள  ரகுல் ப்ரீத் சிங் தற்போது இந்தியில் "தி தி பியார் தி" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜலின் கணவரும் பிரபல நடிகருமான அஜய் காஜலின் ஜோடியாக நடித்துள்ளார் . சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 


 
இந்த படத்தில் 24 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங்’ 50 வயதுள்ள ஒருவரை காதலிக்கிறார். பின் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது . இந்த படம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

 
ராகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே இந்தியில் வெளியான ‘ஐயாரி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், அஜய் தேவகனுடன் நடித்துள்ள இந்த படத்தில் தான் இதுவரை இல்லாத அளவிற்கு படு மோசமான  கவர்ச்சியை காட்டி நடித்துள்ளார். இப்படத்தில் இடப்பெறும் வட்டி ஷராப்பன்( Vaddi Sharaban) என்ற பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :