வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (17:46 IST)

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தீபாவளி துப்பாக்கி தான், இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல: ஓ ராஜா

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சகோதரர் ராஜா நேற்று சசிகலாவை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுகவிலிருந்து ஓ ராஜா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இதுகுறித்து ஓ ராஜா ஊடகங்களில் பேட்டி அளித்தபோது அதிமுகவினர் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரையும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கூறி வருகின்றனர் ஆனால் இருவரும் வெறும் தீபாவளி துப்பாக்கி தான்
 
 இருவரும் கட்சியை சரிவடைய செய்துள்ளனர் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆக்குவதன் மூலமே அதிமுகவை புத்துணர்ச்சியுடன் கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார் அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது