வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:25 IST)

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த பரமசுந்தரி பாடல்… ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் கடந்த மாதம் வெளியானது மிமி படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடல்.

நடிகை க்ரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி உள்ளிட்டவர்கள் நடித்த மிமி திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு மிக முக்கியக் காரணம் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பரமசுந்தரி என்ற பாடல்தான். படத்தின் ரிலீஸுக்கு முன்னரே இணையத்தில் கவனம் பெற்ற பாடல், மொழி தாண்டியும் பல மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ரஹ்மான் இசையில் இப்படி ஒரு துள்ளலான பாடல் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த பாட்டை அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் இந்த பாடல் இப்போது 100 மில்லியன் பார்வையாளர்களை இணையத்தில் கடந்துள்ளது.