திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:33 IST)

ரகுவரன் உருவாக்கிய இசை ஆல்பம் - ரஜினி வெளியிட்ட பாடல் வீடியோ

தமிழ் சினிமாவில் அலட்டலான நடிப்பினாலும், காந்த குரலாலும் ரசிகர்களிடையே பிரபலமானவர் ரகுவரன்.

 
அவரை நடிகராகத்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாடுவது, இசையமைப்பது என அவருக்கு இசையிலும் ஆர்வம் இருந்தது நமக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
 
பாடல்கள் எழுதி, பாடி, இசையமைத்து ஆல்பங்களை வெளியிட வேண்டும் என்கிற ஆசை ரகுவரனுக்கு இருந்துள்ளது. எனவே, அதற்காக ஒரு குழு அமைத்து அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி அவர் பாடியுள்ளார். ஆனால், 70 சதவீத வேலை முடிந்த போது, அவரை மரணம் தழுவிக் கொண்டது.
 
எனவே, அவரது இசை ஆர்வத்தை உலகுக்கு தெரியப்படுத்த நினைத்த அவரின் மனைவி நடிகை ரோகினி, அதற்கான வேலைகளில் இறங்கி, தற்போது அதை சி.டி.யாக வெளியிட்டுள்ளார்.  இதில் சிறப்பு என்னவெனில், ரகுவரன் முடித்துள்ள அதே நிலையில் அந்த ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ரகுவரனின் குரலையும், நடிப்பையும் ரசித்தவர்கள் நிச்சயம் அவரின் குரலிலும், இசையிலும் வெளிவந்துள்ள இந்தப் பாடல்களை நிச்சயம் ரசிப்பார்கள்.