செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (00:55 IST)

பத்மபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு வாழ்த்து கூறிய ரஜினி, கமல், விஷால்

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகிய பத்ம விபூஷன் விருது இசைஞானி இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருது இசைஞானிக்கு கிடைத்துள்ளது தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு மூத்த கலைஞர்களான ரஜினி, கமல் மற்றும் நடிகர் சங்க தலைவர் விஷால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது டுவிட்டரில், '‘எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’ என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், இளையராஜாவிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் விஷால் தனது டுவிட்டரில், \நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது இசையின் கடவுள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரும் பெருமை படுகிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.