1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (18:28 IST)

இந்தியிலும் பேய் ஓட்டப்போகும் ராகவா லாரன்ஸ்! காஞ்சனாவில் நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் !

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து இயக்குனராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துவிட்ட அவர், இந்தியில் பேய் படத்தை எடுக்கப்போகிறார்.


 
தமிழில், ராகவா லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா, சரத்குமார் நடித்த படம் காஞ்சனா. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படத்தை தான் ராகவா  லாரன்ஸ் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இதில்  ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்…சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது….ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார். மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப் பட உள்ளது ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு  துவங்க உள்ளது..