புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 7 மார்ச் 2021 (13:08 IST)

ஓட்டு விற்பனைக்கு அல்ல… நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்- கமல்ஹாசன் டுவீட்

எங்கள்  ஓட்டு விற்பனைக்கல்ல என்று எழுதி வாசலில் மாட்டுங்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நடிகர் சரத்குமாரின் சமக மற்றும் ஐஜேகேவுடன் கூட்டணி வைத்துள்ளது.

மேலும் சில கட்சிகளுடன் அக்கட்சி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழர்கள் ஓட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கூறி கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்

அதில், மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.