சந்திரமுகி – 2 –ல் ஜோதிகாவா,சிம்ரனா, கீரா அத்வானியா உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்

sinoj| Last Updated: சனி, 1 ஆகஸ்ட் 2020 (19:50 IST)

சந்திரமுகி -2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில் ஜோதிகா, அல்லது சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இவர்கள் இருவரும் இல்லை பாலிவுட் ஹீரோயின் கீரா அத்வானி என்பவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ் சமீக காலமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. சந்திரமுகி -2 ல் ஜோதிகா மேடம் அல்லது சிம்ரன் மேடம் நடிக்கிறார்களா இல்லை கீரா மோத்வானி நடிக்கிறார்கள் என்று
பரவிவருவது பொய்யான செய்தி.

தற்போது பட வசனம் வேலைகள் நடந்து கொண்டுள்ளது. அது முடித்ததும் யார் நடிப்பார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :