1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (19:30 IST)

ராகவா லாரன்ஸ் செய்த அடுத்த உதவி: தமிழ் நடிகர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுவரை கொரோனா தடுப்பு நிதியாகவும் நலிந்த நடிகர்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மாஸ் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு உதவி செய்யவில்லை என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ராகவாலாரன்ஸின் உதவி செய்யும் மனப்பான்மைக்கு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் அவர் மீண்டும் இன்று ரூ.50 லட்சம் அம்மா உணவகத்திற்காக நிதியுதவி செய்தார்என்ற செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஒருவரின் குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் தீப்பெட்டி கணேசன், தற்போது மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும், தனக்காக இல்லாவிட்டாலும் தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்கும் வாழ்வாதாரத்திற்காக யாராவது உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் 
 
இந்த வீடியோவை பார்த்த ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் அந்த குழந்தைகளின் கல்வி செலவுகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ராகவாலாரன்ஸின் இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது