செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (08:45 IST)

அம்மா உணவகத்துக்க்கு 50 லட்சம் கொடுத்த நடிகர்! குவியும் பாராட்டுகள்!

அம்மா உணவகங்கள் கொரோனா காலத்தில் இலவசமாக உணவு வழங்கிவரும் நிலையில் அதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. அதன் பின்னர் மீண்டும் ரூபாய் 25 லட்சம் தூய்மை பணியாளர்களுக்கும், 15 லட்சம் சென்னை செங்கல்பட்டு வினியோகஸ்தர் சங்கத்திற்கும் அளித்துள்ளார்.  இதுபோல அவர் ஏற்கனவே மொத்தமாக 4 கோடி ரூபாய்க்கு நன்கொடை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் சென்னையில் இயங்கும் இரு அம்மா உணவகங்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கொரோனாவால் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்களே மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. தமிழகத்தின் சில இடங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

லாரன்ஸின் இந்த செயலுக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.