1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (07:04 IST)

ரஜினியை முந்திய விஜய், ராகவா லாரன்ஸ்: ஆச்சரியத்தில் திரையுலகம்

ரஜினியை முந்திய விஜய், ராகவா லாரன்ஸ்
சம்பளத்திலும் சரி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் சரி ரஜினியை விஜய் முந்துவது என்பது யாருக்கும் ஆச்சரியத்தை தர வாய்ப்பில்லை. ஏனெனில் விஜய்யின் படங்கள் இன்று மிகப்பெரிய ஹிட்டாகி வருகிறது என்பதும், ரஜினியின் சம்பளத்தை அவர் நெருங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினியை ராகவா லாரன்ஸ் முந்தியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இந்த கொரோனா விடுமுறையில் அகில இந்திய அளவில் எந்த நடிகரின் திரைப்படங்களை பொதுமக்கள் அதிகம் பார்த்துள்ளனர் என்பது குறித்த ஒரு கருத்துக்கணிப்பை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் நடிகர் விஜய்யின் படத்தை 117.9 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் திரைப்படம் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அந்த வாரத்தின் டி.ஆர்.பி ரேட் அந்த தொலைக்காட்சிக்கு எகிறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய்யை அடுத்து இரண்டாமிடத்தில் ராகவா லாரன்ஸ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அவரது திரைப்படத்தை 76.2 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளனர். காமெடி மற்றும் ஹாரர் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் ராகவா லாரன்ஸ் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
 
விஜய், ராகவா லாரன்ஸை அடுத்து மூன்றாமிடத்தில் தான் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார். இவருடைய படங்களை 65.8 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளனர். இந்த பட்டியலில் அஜித், கமல்ஹாசன் படங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது