வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (08:16 IST)

மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ் & ராகவா லாரன்ஸ்!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில்  நடப்பதாக உருவாக்கப் பட்டுள்ளது.

ரிலீஸ் ஆனது முதல் இந்த படத்துக்கு சிறப்பான பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் படத்துக்கு வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ் “எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனத்துக்கு நான் மீண்டும் கால்ஷீட் தருகிறேன். அந்த படத்தை அவர் இயக்கினாலும் இல்லை வேறு யாரோ இயக்கினாலும் நான் நடிக்க தயார்” எனக் கூறியுள்ளார்.