புதன், 21 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:49 IST)

தனுஷ் 50 திரைப்படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் இதுவரையில் 110 நாட்கள் இடைவெளியின்றி ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளாராம் இயக்குனரும் நடிகருமான தனுஷ். இன்னும் சில நாட்களில் மொத்த ஷுட்டிங்கும் முடியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.