1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (09:34 IST)

தனுஷ் மகனுக்கு அபராதம் விதித்த காவல்துறை.. வீட்டிற்கே சென்று வசூல் செய்த அதிகாரிகள்..!

நடிகர் தனுஷ் மகன் ஹெல்மெட் இல்லாமல், லைசென்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டியதை எடுத்து அவரது வீட்டுக்கே சென்று காவல்துறை அதிகாரிகள் அபராதம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
 
நடிகர் தனுஷின் மூத்த மகன்  யாத்ரா. இவருக்கு தற்போது 17 வயது மட்டுமே ஆகி வந்த நிலையில் பைக் ஓட்டியதாக பரவிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனை அடுத்து  போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் விசாரணை செய்தனர். 
 
இதில் தனுஷ் மகன் லைசென்ஸ் இல்லாமல் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியது உறுதி செய்யப்பட்டது.  போயஸ் கார்டன் பகுதியில் அவர் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த வீடியோவின் ஆதாரத்தை வைத்து  அவருடைய வீட்டிற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், தனுஷ் மகனுக்கு 18 வயது ஆகவில்லை என்றும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்றும் அதனால் அவர் தொகை கட்ட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதாகவும் இதனை அடுத்து அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran