ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (18:41 IST)

சூப்பர் ஸ்டார் பாராட்டு....இனி தனி ஹீரோ தான் - எஸ்.ஜே.சூர்யா

ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள  நிலையில் இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தீபாவளியையொட்டி ரிலீஸான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று கோவை சென்ற எஸ்.ஜே.சூர்யாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது: ''தலைவர் ரஜினிகாந்த் குறிஞ்சி மலர் என்று பாராட்டியது மகிழ்ச்சியக்கிறது. கார்த்திக் சுப்புராஜிக்கு கேரியரில் பெஸ்ட்டாக இப்படம் வந்திருக்கிறது. மக்கள் இதைக் கொண்டாடுகின்றனர்.

இது மகிழ்ச்சியளிக்கிறது. கிரிக்கெட்டை தாண்டி இப்படம் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு ஹீரோவாக நடித்ததற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இனி தனி ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் ''என தெரிவித்துள்ளார்.