1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:40 IST)

விமானத்தில் நிலையில் மகனை கட்டியணைத்து கதறி அழுத ராதிகா - வைரல் வீடியோ!

நடிகர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் 60ஸ் காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போது அம்மா போன்ற குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஏர்போர்ட்டில் தனது மகனை கட்டியணைத்து அழுத வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
 
இப்பதிவில், இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவு என்று எனக்குத் தெரியும், ஆனால் நேரம் செல்லச் செல்ல குடும்பத்தை விட்டு விலகி இருப்பது மிகவும் கடினம். நாங்கள் கடினமாக இருக்கிறோம், குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
 
அதையெல்லாம் நாங்கள் சமாளிக்கிறோம், எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இதுதான், எங்கள் குடும்பத்திற்கு சிறந்தவர்களாக இருக்க முயற்சி செய்கிறார்கள். எனவே சவாரி செய்வதற்கு மேலும் ஒரு சவால், என் ஆறுதல் வரி மற்றும் ஆறுதல். என கேப்ஷன் கொடுத்துள்ளார். 
 
அவரது மகன் ராகுல் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். மகனை சந்திக்க சென்ற ராதிகா சென்னை திரும்பியபோது மகனை பிரிய மனம் இல்லாமல் அவரை கட்டியணைத்து அழுதுள்ளார். அவருடன் வெளிநாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.