திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:32 IST)

பொன்னியின் செல்வன் Promotion'ல் விக்ரம் அணிந்த வாட்ச் இத்தனை லட்சமா?

நடிகர் விக்ரமுக்கு 57 வயது ஆகிய போதிலும் இன்னும் அவர் இளைஞர்போல் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து, டூயட் பாடி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம்  ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அதன் ப்ரோமோஷனுக்காக படத்தின் நடிகர், நடிகைகள் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ரம் சம்மந்தப்பட்ட ப்ரோமோஷன் விழாவில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள  சுவிட்சர்லாந்தின் ஹியூப்லோட் என்கிற பிராண்ட் வாட்ச் அணிந்திருந்தார். அதன் விலை பலரையும் மிரளவைத்துள்ளது.