திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (12:28 IST)

காதலர்கள் சண்டை வந்தால் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்… ராதிகா ஆப்தே அட்வைஸ்!

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இப்போது இந்தியாவில் ஓடிடி நடிகை என சொல்லப்படும் அளவுக்கு பல நேரடி ஓடிடி படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் காதலர்களுக்கு அட்வைஸ் சொல்வது போல ஒன்றை கூறியுள்ளார். அதில் “காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் சண்டை வந்தால் மூன்றாவது நபரின் வார்த்தைகளைக் கேட்காதீர்கள். அப்படி கேட்கும் போதே உறவுகளுக்குள் விரிசல்கள் அதிகமாகி விடும்” எனக் கூறியுள்ளார்.