1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (20:12 IST)

குறட்டையை மையமாக வைத்து தமிழ்ப்படம்: ‘ஜெய்பீம்’ நடிகர் தான் ஹீரோ!

manikandan1
குறட்டையை மையமாக வைத்து தமிழ்ப்படம்: ‘ஜெய்பீம்’ நடிகர் தான் ஹீரோ!
தமிழ் திரை உலகில் முதல் முதலாக குறட்டையை மையமாக வைத்து ஒரு காமெடி திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் ஜெய் பீம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மணிகண்டன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை வினாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக் இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் 
 
குறட்டையினால் ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் ஜனரஞ்சகமாக ஒரு பொழுதுபோக்கு படமாக தயாராகி உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துவிட்ட நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva