பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 30 என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று செய்திகள் வெளியானதை அடுத்து இன்று மீண்டும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேதி அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்து என்றும் இந்த தேதியில் மாற்றம் ஏதுமில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
மேலும் இன்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் உள்ளனர் என்பதும் இந்த போஸ்டர் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பிரபாஸ் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான சலார் என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்