செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (12:01 IST)

கீர்த்தி சுரேஷ் காட்டில் மழை: தேடி வந்த பெரிய ஆஃபர்?

பிரபாஸுக்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களின் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் அடுத்து ’ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் உருவாகி வருகிறது. 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
அதையடுத்து தற்போது படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.