செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:05 IST)

ஹாலிவுட் மாதிரி படம் எடுக்கிறோம்… ஆனால் -ராதாரவி ஆதங்கம் !

ராதாரவி

படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நடந்த் கூடட்த்தில் நடிகர் மற்றும் டப்பிங் யூனியன் சங்கத் தலைவர் ராதாரவி கலந்துகொண்டார்.

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 பேர்கள் பலியானது தமிழ் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடத்தில் நடந்து வரும் விபத்துகளால் பலர் உயிரிழப்பது வாடிக்கையாகியுள்ள நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இறந்த கிருஷ்ணா, மது மற்றும் சந்திரன் ஆகிய மூன்று பேருக்குமான அஞ்சலி கூட்டம் இன்று திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தால்  அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட டப்பிங் யூனியன் சங்க தலைவர் ராதாரவி ‘ஹாலிவுட் படங்களின் தரத்துக்கு இணையாக நாம் படம் எடுப்பதாக சொல்கிறோம். அவர்களைப்  போல  நாமும் நம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தித் தரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.