வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:25 IST)

அமித் ஷா 100 கருணாநிதிக்கு சமம் – புகழ்ந்த பிரபல நடிகர் !

உள்துறை அமைச்சர் அமித் ஷா

நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 100 கருணாநிதி மற்றும் 200 ஜெயலலிதாவாக செயல்பட்டு வருகிறார் என பாஜகவில் இணைந்துள்ள ராதாரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் ராதாரவி மேடைகளில் அநாகரிகமாக பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில் பெயர் போனவர். இதே போல அவர் திமுகவில் இருக்கும் போது நடிகை நயன்தாரவைப் பற்றி அநாகரீகமாகப் பேச அது சர்ச்சையானது. அதனால் ஒழுங்கு நடவடிக்கையாக திமுக அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் இப்போது தேசியக் கட்சியான பாஜகவில் இணைந்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘67 வருட மாகத் திராவிடத்தையே சுவாசித்து வந்தேன். இப்போது இணைந்த தேசியத்தைச் சுவாசிக்கிறேன். தமிழகத்தைக் காப்பாற்றும் ஒரே கட்சி பா.ஜ.க தான். அமித்ஷா 100 கருணாநிதி மற்றும் 200 ஜெயலலிதாவாக செயல்பட்டு வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெல்லும்.’ எனக் கூறியுள்ளார்.