1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash

’ராம் லீலா’ படத்தின் காப்பியா பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’??

’ராம் லீலா’ படத்தின் காப்பியா பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’ இருக்குமோ என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
 
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ’பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
 
இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகினது. இந்த நிலையில் ’பிரபாஸ் 20’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு ’ராதே ஷ்யாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பாலிவுட் படமான ராம் லீலாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போல உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. ராம் லீலா ஒரு காதல் கதை. இதில் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் நடித்திருந்தனர். 
 
ராதே ஷ்யாம் படமும் காதல் படமாக இருக்கும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வரும் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.