செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (09:19 IST)

எல்லோரும் கேக்குறாங்க… எப்படி சூர்யா உங்க கதையை ஓகே பண்ணார்னு?- ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்!

’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, மற்றும் ‘என் ஜி கே’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கங்குவா ரிலீஸான பின்னர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் காஷ்மீரா பரதேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கங்குவா ஆடியோ ரிலீஸ் மேடையில் பேசிய ஆர் ஜே பாலாஜி “எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்? சூர்யா சார் நிறைய பெரிய இயக்குனர்களின் கதைகளை எல்லாம் ரிஜெக்ட் செய்துள்ளார்? அவர் எப்படி நீங்கள் சொன்ன கதையை ஓகே செய்தார் எனக் கேட்கிறார்கள்?.. அவர்களுக்கு எல்லாம் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். செம்ம மாஸாக ஒரு கதை சமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் உங்களுக்கு அந்த படம் விருந்தாக வைக்கப்படும்.” எனக் கூறியுள்ளார்.