சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!
தமிழக அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார் ஹெச் ராஜா. பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த அவர் தற்போது அக்கட்சியில் பெரிய பதவிகளில் இல்லாமல் இருக்கிறார்.
ஆனாலும் அரசியலில் தொடர்ந்து இயங்கி வரும் ஹெச் ராஜா, தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். கந்தன் மலை என்ற படத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தை வீரமுருகன் என்பவர் இயக்க, தாமரை டிவி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த முதல் லுக் போஸ்டரை நயினார் நாகேந்திரன் வெளியிட பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரம் இந்த போஸ்டரில் ஹெச் ராஜாவின் லுக் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் ஆகியும் வருகிறார்.