வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (09:12 IST)

மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஏன் இயக்கவில்லை?... மனம்திறந்த ஆர் ஜே பாலாஜி!

கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி மீண்டும் ஒரு அம்மன் கதையாக ‘மாசானி அம்மன்’ என்ற படத்தை விரைவில் இயக்கவுள்ளார். ஆனால் முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கவில்லை என சொல்லப்பட்டது. இதற்கிடையில் பாலாஜிக்கு போட்டியாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. பின்னர் அந்த படத்தின் இயக்குனராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள ஆர் ஜே பாலாஜி “நான் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் என்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய சுந்தர் சி சார் அந்த படத்தை இயக்குகிறார். அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதிர்ஷ்டவசமாக நான் சூர்யா 45 படத்தை இயக்குகிறேன். மூக்குத்தி அம்மன் இல்லையென்றால் மாசானி அம்மன்” என ஜாலியாகப் பதிலளித்துள்ளார்.