செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (18:06 IST)

’கோட்’ படத்தில் முக்கிய கேரக்டரை மிஸ் செய்தாரா நயன்தாரா? வெங்கட்பிரபு பேட்டி..!

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரை நடிகை நயன்தாரா மிஸ் செய்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

’கோட்’ திரைப்படத்தில் தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த நிலையில் இந்த ஜோடி க்யூட்டாக இருந்தது என்றும் இந்த ஜோடி வரும் காட்சிகள் ரசிக்கும் வகையில் இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சினேகா நடித்த கேரக்டரில் முதலில் அடிக்க இருந்தது நயன்தாரா தான் என்றும் இது குறித்த பேச்சு வார்த்தையும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நயன்தாரா இந்த கேரக்டரில் நடிக்க முடியவில்லை என்றும் சமீபத்தில் பேட்டி அளித்த வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும் ’கோட்’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த நயன்தாரா இந்த கேரக்டருக்கு சினேகா மிகவும் பொருத்தமாக இருந்தார் என்றும் மிகவும் அருமையாக நடித்திருந்தார் என்றும் வெங்கட் பிரபுவிடம் சினேகாவின் நடிப்பு குறித்து நயன்தாரா பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva