பியார் பிரேமா காதல்: டிரைலர் ரிலீஸ்! (வீடியோ)

Last Updated: சனி, 21 ஜூலை 2018 (20:29 IST)
பிக்பாஸ் மூலம் பிரபலமான ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் பிராய் பிரேமா காதல் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 
அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள பியார் பிரேமா காதல் படத்தை யுவன் ஷங்கர் ராஜாவும், கே புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்தும் உள்ளார். 
 
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
தற்போது இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரின் மூலம் இது காதல், காமெடி இணைந்த காம்போவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதோ அந்த டிரைலர்...
 


இதில் மேலும் படிக்கவும் :