திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (17:54 IST)

பியார் பிரேமா காதல்: க்ராண்ட் அப்டேட்!

இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவர இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் டிரெல்யர் சமீபத்தில் வெளியானது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ரைசா, ஹரிஷ் கல்யாண். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் பியார் பிரேமா காதல். 
 
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போது மாஸ் ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரெய்லருக்கு கிடைத்துள்ளது. 
 
படத்தின் இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்கழு அறிவித்துள்ளது. 
 
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் மற்றும் இசையமைப்பில் பியார் பிரேமா காதல் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.