புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (17:43 IST)

சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானம்

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது மறைவு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,புனித் ராஜ்குமார் மறைவுக்கு தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, கமல்ஹாசன், நாசர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் , புனித் ராத்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது ரசிகர்கள் இறந்த பின்னும் தான் பிறருக்காக பார்வை வழங்கும் பொருட்டு  புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டி வருகின்றனர்.