1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (11:09 IST)

லவ் யூ தங்கமே... ஷிவாங்கிக்கு வாழ்த்து சொன்ன பாசக்கார அண்ணன் புகழ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருந்த புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்றே சொல்லலாம்.
 
அவர் ஷிவாங்கியை தங்கையாக பாவித்து நடித்து தமிஸ்க் மக்களின் மனசுல மாடர்ன் பாசமலர்களாக வலம் வந்துக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தினாலும் அந்த பாச பந்தம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. 
 
அதனை நிரூபிக்கும் வையில் புகழ் தனது இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியுடன் எடுத்துக்கொண்ட கியூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, " ஹேப்பி பர்த்டே மை செல்லக்குட்டி, லவ் யூ தங்கமே மிஸ் யூ பட்டுக்குட்டி எப்பவும் ஹேப்பியா இருக்கனும். அண்ணா கடைசி வரைக்கும் உன் கூடவே இருப்பேன் என கூறி பாசத்தை பொழிந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.