திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (09:57 IST)

ஹேப்பி பர்த்டே Naughty குயின் - ஷிவாங்கிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவரான ஷிவாங்கி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.

அதில் அஷ்வின் மீதுள்ள Crush தான் அவரை அனைவருக்கும் பிடிக்க காரணமாக இருந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது 20 பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நண்பர்கள்,  ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்களின் மனதை வென்ற ஷிவாங்கிக்கு வெப்துனியா சார்பில் வாழ்த்துக்கள்.