திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:31 IST)

அக்கட தேசத்தில் மங்கிய சூர்யாவின் மார்க்கெட்… ஆனால் தளபதிக்கு சுக்கிரதிசைதான்!

தமிழ் நடிகர்களில் தெலுங்கு சினிமாவில் அதிக மார்க்கெட் வைத்திருந்த நடிகர் என்றால் சில ஆண்டுகளுக்கு முன்னால் சூர்யா என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

சூர்யாவின் வாரணம் ஆயிரம், அயன் உள்ளிட்ட படங்கள் தமிழில் மட்டும் வெற்றி பெறாமல் தெலுங்கிலும் பின்னி பெடல் எடுத்தன. இதனால் சூர்யா படம் ரிலீஸாகும் போது தெலுங்கு முன்னணி நடிகர்களே தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய பயந்தனர். ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது சூர்யாவின் இப்போதைய நிலைமை. காரணம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திரையரங்கில் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகிறார் சூர்யா. இதனால் அவரின் தெலுங்கு மார்க்கெட் சுருங்கியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் தெறி, சர்கார். மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்புக் கிடைக்கவே விஜய் ஆந்திராவிலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். இப்போதைய நிலவரத்தில் விஜய்க்கு தெலுங்கு மார்க்கெட்டில் நல்ல கிராக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.