1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (21:29 IST)

செல்பி விவகாரம் புது செல்போன் வாங்கிக்கொடுத்தார் சிவக்குமார்...

சினிமா பிரபலங்கள் பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.
நடிகர் சிவக்குமார் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு கடைதிறப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த போது தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞன் ஒருவனின் செல்போனை தட்டி விட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
 
பிரபலங்கள் இதுபோல பொதுவெளியில் நடந்து கொள்வது சமூக வலைதளங்களில் உடனே வைரலாகி விடுகிறது. என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களதானே?. அவர்களுக்கும் கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள உண்டுதானே?. பொதுமக்களும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுதல், செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் பிரபலங்கள் அனைவரும் நாம் திரையில் பார்ப்பது போல எந்நேரமும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.
 
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது 19, 000 மதிப்புள்ள செல்போன் உடைந்துவிட்டதாக சமுக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்திரிந்தார். 
 
இந்நிலையில் தனது செயல் குறித்து சிவக்குமார் நேற்று வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில் இன்று அந்த இளைஞருக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 25000 மதிப்புள்ள செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.