மனைவி மகாலட்சுமிக்கு கோடிக்கணக்கில் பரிசளித்த ரவீந்திரன்: என்னென்ன தெரியுமா?
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல்நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் மனைவிக்கு கோடிக்கணக்கில் பரிசளித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் திருமணம் செய்த தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவி மகாலட்சுமிக்கு கிலோ கணக்கில் நகை செய்து கொடுத்திருப்பதாகவும் அதேபோல் 300 பட்டுப்புடவைகள் வாங்கி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி 75 லட்சம் மதிப்புள்ள மாளிகை போன்ற வீட்டையும் மனைவி மகாலட்சுமிக்கு அவர் பரிசளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பணத்திற்காக தான் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்ததாக கூறப்படும் நிலையில் இந்த பரிசு பொருட்கள் குறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.