ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (17:52 IST)

திருமால் எடுத்த அவதாரங்களில் மகாலட்சுமியை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Lord Raman
திருமால் அன்பர்களை காத்து அருள் புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும்.


திருமால் ஆமை அவதாரம் எடுத்து மலையை தாங்கியதாலேயே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது. அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினார். திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று தேவியை மணந்து கொண்டார்.

மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த திருமகளின் மறுகூறான பூமி தேவியை மேற்கொண்டு வந்து உலகைப் படைத்தார். அவரைப் பூவராகம் என்று போற்றுகின்றனர். அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகிலவல்லி என்று அழைக்கப்படுகிறாள்.

சில ஆலயங்களில் திருமகளை மடிமீது கொண்டுள்ள லட்சுமி, வராகரையும் சில தலங்களில் புவிமகளை மடி மீது கொண்டுள்ள வராகரையும் காணலாம். ஆதிவராக ஷேத்திரமான ஸ்ரீமுஷ்ணத்தில் வராக மூர்த்தி இருபெரும் தேவியருடன் காட்சியளிக்கின்றார்.

நரசிம்ம அவதாரத்தில் அவர் இரண்யனின் குடலை பிடுங்கி மாலையாக அணிந்தும், ரத்தத்தை குடித்தும், ஆர்ப்பரித்தார். அவருடைய கோபக் கனல் எல்லாரையும் வருத்தியது. தேவர்கள் அவருடைய உக்கிர மயமான கோபத்தை எளிதில் தணிக்கும் ஆற்றல் மகாலட்சுமிக்கே உண்டு என்பதால் அவளை பணிந்து சாந்தப்படுத்துமாறு வேண்டினர்.

மகாலட்சுமி நரசிம்மரை அணுகிக் கோபத்தை மாற்றினாள். பிறகு திருமால் அவளைத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டு லட்சுமி நரசிம்மனாக அனை வருக்கும் அருள்புரிந்தார். இதையட்டி நரசிம்மர் ‘மாலோலன்’என்று அழைக்கப்படுகிறார்.

ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் மகாலட்சுமி ஜனக புத்ரியாக சீதையாக தோன்றி, ராமபிரானை மணந்தாள். அப்போது அவளுக்கு சீதா, ஜானகி, மைதிலி, வைதேகி, ராகவி முதலான பெயர்கள் வந்தன.

எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள்.

ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவ தாரத்தில் மகாலட்சுமி வைஷ்க மன்னனின் மகளாகத் தோன்றி ருக்மணி எனும் பெயரில் வளர்ந்து கிருஷ்ணனை மணந்தாள். திருவல்லிக்கேணிப் பார்த்த சாரதி ஆலயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தசாரதி கோலத்தில் நிற்க, அவருக்கு வலப்புறம் பெரிய வடிவில் ருக்மணியைக் காணலாம்.