1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (10:02 IST)

கின்னஸ் சாதனை தமிழ் திரைப்படத்தை தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

hemnak
கின்னஸ் சாதனை தமிழ் திரைப்படத்தை தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!
கின்னஸ் சாதனை படைத்த தமிழ் திரைப்படமான சுயம்வரம் என்ற திரைப்படத்தை தயாரித்த ஹேம்நாக் பாபுஜி என்பவர் காலமானார். அவருக்கு  வயது 76. 
 
கடந்த சில நாட்களாக திரைப்பட தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலன் இன்றி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கின்னஸ் சாதனை செய்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சுயம்வரம் என்ற படத்தை தயாரித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காளி, கர்ஜனை உள்ளிட்ட படங்களையும் இவர் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜியின் மறைவுக்கு திரையுலகினார் கண்ணீர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
 
Edited by Siva